திருமணமாகி 2 குழந்தைகள்! ஆனாலும் கல்லூரி பேராசிரியை பட்டப்பகலில் ஆம்புலன்சில் கடத்திய அதிமுக பிரமுகர்! திருச்சி திகுதிகு!

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த பேராசிரியரை கல்லூரி செல்லும் வழியில், ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மலைக்கோட்டை பகுதியில் வசிக்கும் மகாலட்சுமி, திருச்சியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் தினமும் தனது தோழியுடன் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், ஆளும் கட்சி பிரமுகர் வணக்கம் சோமு என்பவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்து கடத்த முயன்றுள்ளார். அப்போது மகாலட்சுமி மற்றும் அவரது தோழி இருவரும் கூச்சலிட்டு இருகிறார், அதனால் தோழியை தள்ளிவிட்டு, வணக்கம் சோமு மகாலட்சுமியை மட்டும் வாகனத்தில் ஏற்றிக் கடத்தி சென்றுள்ளார்.

கடத்தல் தொடர்பாக மகாலட்சுமியின் தோழி மற்றும் தாய் நாகலட்சுமி இருவரும், திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். பின்னர், காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். 

பின்னர், செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்ததில் துவரங்குறிச்சி அருகே வாகனம் சென்று கொண்டிருந்ததை அறிந்த காவல் துறையினர், பிற காவல்நிலையங்களுக்கும் தகவல் அளித்து விரட்டிச் சென்றுள்ளனர். இந்த செய்தியினை அறிந்த வணக்கம் சோமு மகாலட்சுமியை துவரங்குறிச்சி பகுதியிலேயே இறக்கிவிட்டு, பின் தப்பிச் சென்றுள்ளார். 

மகாலட்சுமி கடத்தல் குறித்த, காவல் துறை விசாரணையில், பேராசிரியரை மகாலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் மகாலட்சுமிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வந்துள்ளது. இதன் காரணமாக வணக்கம் சோமு கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. வணக்கம் சோமுக்கு , ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் தந்தையில்லாதா மகாலட்சுமி, திருமணத்தில் எவ்வித இடையூறு இல்லமால் நடைபெற வணக்கம் சோமுவை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.