பஸ் ஸ்டாப் அமைத்து கொடுத்த அதிமுக எம்பிக்கு கன்னத்தில் ஓங்கி ஒரு அறை! திமுக பிரமுகர் அடாவடி!

திருச்சி அதிமுக எம்பி குமாரை தி.மு.க பிரமுகர் ஒருவர் ஓங்கி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி பொன்மலை பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்க அத்தொகுதி எம்.பி குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். இதற்கான பணிகள் நேற்று தொடங்கியது.

ஆனால் பேருந்து நிறுத்தம் அமைத்தால் அப்பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு இடைஞ்சல் ஏற்படும் என்று தி.முக. பகுதிச் செயலாளர் ஆன தர்மராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பேருந்து நிறுத்த பணிகளை தர்மராஜ் தடுத்து நிறுத்தினார்.

இந்த நிலையில் திருச்சி எம்.பி குமாரின் வீடு அந்தபகுதியில் தான் உள்ளது. இதனை அடுத்து அவர் அவ்வழியாக சென்ற போது பேருந்து நிறுத்தப்பணிகள் நடைபெறாதது குறித்து விசாரிக்க கீழே இறங்கியுள்ளார். அப்போது தி.முக. பிரமுகர் தர்மராஜ் இடையூறு செய்வதாக அதிமுகவினர் கூறியுள்ளனர்.

உடனே திருச்சி எம்.பி குமாரும், அ.தி.மு.க மாணவர் அணி நிர்வாகி ஏர்போர்ட் விஜியும் அங்கு வந்து திமுக பிரமுகர் தர்மராஜை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. அப்போது தர்மராஜ் உள்ளிட்ட திமுகவினர் கையில் உருட்டுக் கட்டைகளுடன் வந்து அ.தி.மு.கவினரை தாக்க தொடங்கினர்.

மோதலின் போது திருச்சி எம்.பி குமாரை கன்னத்தில் தர்மராஜ் ஓங்கி ஒரு அறை விட்டுள்ளார். இதனால் பதறிப்போன போலீசார் குமாரை அங்கிருந்து மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். குமார் தாக்கப்பட்ட சம்பவத்தை அறிந்த அதிமுகவின்ர அங்கு திரண்டு திமுகவினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

அப்போது தி.மு.க பிரமுகர் தர்மராஜின் அலுவலகம் அடித்து நொறுக்கப்படடது. மக்களுக்கான பேருந்து நிறுத்தம் அமைக்க குமார் முயற்சிக்கும் நிலையில் தனது அலுவலகம் பாதிக்கப்படும் என தி-ம.க பிரமுகர் சுயநலமாக நடந்து கொள்வதாக அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே திருச்சி எம்பி குமாரை கன்னத்தில் அறைந்த திமுக பிரமுகர் தர்மராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.