10ம் வகுப்பு சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய திருமணமான நபர்! விரட்டி விரட்டி வெட்டிய பெண்ணின் அண்ணன்கள்! திருச்சி திகுதிகு!

திருச்சி திம்மராயசமுத்திரத்தில் மனைவி பிரிந்து சென்றதால் வசதிக்கு இல்லாவிட்டாலும் அசதியை போக்கிக்கொள்ள காதல் வலை வீசிய கட்டிடத் தொழிலாளியை வூடு கட்டினர் சம்பந்தப்பட்ட மாணவியின் சகோதரர்கள்.


கட்டிடத் தொழிலாளியான மணிகண்டன் ஏற்கனவே திருமணம் ஆனநிலையில் அவருடன் வாழ பிடிக்காமல் அவரது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நீண்ட நாட்களாக தனிமையில் வாழ்ந்து வந்த மணிகண்டன் தனக்கென ஒரு துணை இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் தன்னுடைய வீட்டு அருகே தினமும் பள்ளிக்கு சென்று வரும் 10ம் வகுப்பு மாணவியை பார்த்து சபலமடைந்த மணிகண்டன் அவரை எப்படியாவது காதலித்து தன்வசமாக்கி மனைவி இல்லாத குறையை தீர்த்துக் கொள்ளலாம் என எண்ணினார்.

இதையடுத்து அந்த மாணவியை அவ்வப்பொழுது வழிமறித்து பேசி பேசி அந்த மாணவியை மூளைச்சலவை செய்து தன்வசம் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட மாணவியின் சகோதரர்கள் மணிகண்டனை அழைத்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் பிரச்சனை வேறுமாதிரியாகிவிடும் என எச்சரித்துள்ளனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மணிகண்டன் புதன்கிழமையன்று அகிலாண்டேஸ்வரி கோயில் அருகே மாணவியை அழைத்து தனிமையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் அண்ணன்களான சிவா, சுரேஷ், சந்தோஷ் மற்றும் ஒரு நண்பர் ஆகியோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். இதனால் உயிருக்கு பயந்து ஓடினார் ஓடினார் அடகு கடை ஒன்றுக்குள் ஓடினார் மணிகண்டன்.

ஆனாலும் அவரை இழுத்து வந்து ரோட்டில் போட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியது அங்குள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகி உள்ளது. சம்பவம் அறிந்து வந்த போலீசார் மணிகண்டனை மருத்துவமனையில் அனுமதித்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

வீடு கட்டிப்பார் ! கல்யாணம் பண்ணிப்பார் ! என்பார்கள் அந்த கஷ்டத்தை புரிந்துகொள்ள. கட்டிடத் தொழிலாளிக்கு கல்யாண வாழ்க்கைதான் கஷ்டத்தை கொடுத்துவிட்டது. கட்டிடங்களையாவது ஒழுங்காக கட்டுவாரா என பொருத்திருந்து பார்ப்போம் !