மின்கம்பியில் பட்டது தலைமுடி தான்! ஆனால் போனது 2 பேரின் உயிர்! ஒரே ஊரே கதறும் பரிதாபம்!

திருச்சி: மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் தர்மர். இவருக்கு தாய், தந்தை மற்றும் பாட்டி உள்ளனர். சென்னையில் பணிபுரிந்து வந்த தர்மர், அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு நீண்ட தேடுதலுக்குப் பின்னர், பெற்றோர் ஜான்சிராணி என்ற பட்டதாரிப் பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில்,  தர்மர் தனது மனைவிக்காக, வீட்டின் பின்புறம் புதியதாக ஒரு குளியலறை கட்டிக் கொடுத்திருக்கிறார். மிகச் சிறியதாக இருந்த அந்த குளியலறைக்கு வீட்டின் பின்புறத்திலேயே ஒயர் மூலம் மின் வசதி செய்திருக்கிறார். 

இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, சொந்த ஊருக்கு வந்த தர்மருக்கு எதிர்பாராத சோகம் நிகழ்ந்தது. ஆம், அவரது மனைவி ஜான்சிராணி, வீட்டின் உள்ளே  உள்ள குளியலறையில் துணியை துவைத்து, அதனை  மின் கம்பி மீது போட்டுள்ளார்.

உடனடியாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற ஓடிவந்த தர்மர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. கணவன் மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து, உயிருக்குப் போராடிய நிலையில், சுமார் 2 மணிநேரம் அக்கம் பக்கத்தினர் யாரும் இதுபற்றி தெரியாமல் வழக்கம்போல இருந்துள்ளனர்.

நீண்ட நேரம் கழித்து, தர்மரின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோதுதான் இந்த விவரம் தெரிந்து அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், தகுந்த முதலுதவி செய்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.