டிபன் கடையில் கள்ளக் காதல்! கண்டித்த கணவன்! திருந்திய மனைவி! ஆனால் பிறகு நேர்ந்த பயங்கரம்!

திருச்சியில் கள்ளக்காதலை தொடர மறுத்த பெண்ணை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்


திருச்சி ஏர்போர்ட் காந்தி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. கேகே நகரில் அரிசி குடோன் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா சத்யா திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்தார்.

அந்த டிபன் கடைக்கு வரும் ஆட்டோ ஓட்டுநரான சண்முகத்துடன் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் தொடர்ந்த நிலையில் அதனை மாரிமுத்து கண்டித்தார்.

இதையடுத்து சண்முகத்துடனான பழக்கத்தையும் பேசுவதையும் உமா குறைத்துக்கொண்டார் இந்நிலையில் நேற்று குடிபோதையில் உமாவின் கடைக்கு வந்த சண்முகம் அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரம் முற்றிய நிலையில் கத்தியால் உமா சத்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்த சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடினார்.

தகவலறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் சண்முகத்தை கைது செய்தனர். விசாரணையின் போது தன்னை மறந்து விட்டு உமா சத்யா கணவருடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அதனை ஏற்க முடியாமல் ஆத்திரமடைந்து தான் கொலை செய்ததாகவும் சண்முகம் போலீசாரின் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது