கிணற்றில் சடலமாமக மிதந்த அரசு பெண் ஊழியர்! காரணம் அந்த 3 பெண்கள்! ராமநாதபுரம் அதிர்சசி சம்பவம்!

ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து டார்ச்சர் தந்ததாக கூறப்படும் பெண்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.


ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணியைச் சேர்ந்த நம்புராஜன் என்பவரின் மனைவி ஷோபனா ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார். நம்புராஜன்-ஷோபனா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் பணிக்கு சென்ற ஷோபனா திரும்பி வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

கேணிக்கரை போலீஸ் வழக்குப்பதிவு செய்து ஷோபனாவை தேடி வந்த நிலையில் காட்டூரணியில் புதிதாக தோண்டப்பட்ட குடிநீர் கிணற்றில் பெண் சடலம் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ், தீயணைப்புத்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பார்த்தபோது அது 2 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன ஷோபனா என தெரியவந்தது.

பின்னர் அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஷோபனா வீட்டில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை படித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த கடிதத்தில் மிகத் தெளிவாக தன்னுடன் பணியாற்றும் 3 பெண் ஊழியர்களின் மன உளைச்சல் தந்ததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது மரணத்திற்கு காரணமான அவர்கள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். ஷோபனா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

மனஉளைச்சல் தரும் ஊழியர்கள் மீது போலீசிலோ முதலமைச்சர் தனி பிரிவிலோ புகார் அளித்திருக்கலாம் அல்லது வேலையை விட்டுவிட்டு குடும்பத்தை கவனித்திருக்கலாம். ஆனால் தற்கொலை செய்து கொண்டதால் தண்டனை அந்த 3 பெண் ஊழியர்களுக்கு அல்ல. அவரது கணவருக்கும், மகளுக்கும்தான்.