ஹரியான மாநிலம் குர்கானில் கர்ப்பிணி மற்று அவரது கணவரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாயை கொள்ளைடியத்து சென்ற திருநங்கைகளை போலீசார் தேடிவருகின்றனர்.
திருநங்கைகளால் கர்ப்பிணி பெண்ணுக்கு நள்ளிரவில் ஏற்பட்ட விபரீதம்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

ஹரியான மாநிலம் குர்கானில் செக்டர் 46 எனும் பகுதியில் ஒரு கர்ப்பிணி வீட்டிற்கு நள்ளிரவில் வந்த திருநங்கைகள் தாங்கள் ஆசீர்வாதம் செய்ய வந்துள்ளதாகவும் அதற்கு பணம் தருமாறும் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
அதற்கு தங்களிடம் பணம் இல்லை என கர்ப்பிணியும் அவரது கணவரும் சொன்னதை ஏற்க மறுத்த 3 திருநங்கைகளும் அங்கு முகம் சுளிக்கச் செய்யும் காரியங்களை செய்துள்ளனர். இதனால் வேதனையடைந்த அந்த பெண்ணின் கணவன் அக்கம் பக்கத்திலும் உதவ யாரும் இல்லாததால் 2,100 ரூபாய் தருவதாக திருநங்கைகளிடம் தெரிவித்துள்ளார்.
இதை ஏற்க மறுத்த திருநங்கைகள் தங்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் தந்தால் மட்டுமே இடத்தை விட்டு காலி செய்வோம் என அராஜகம் செய்துள்ளனர். அந்தப் பணத்தை தம்பதி கொடுக்க மறுக்கவே வீட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை கட்டாயமாக எடுத்துக்கொண்டனர்.மேலும் கர்ப்பிணி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றபோது அவர் கூச்சலிட்டதால் பயந்து போன திருநங்கைகள் அங்கிருந்து காரில் தப்பி சென்றுள்ளனர்.
இதுகுறித்து செக்டர் 50 காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காரில் தப்பிச் சென்ற திருநங்கைகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரி ஷாகித் அகமது தெரிவித்துள்ளார். உழைத்துதான் வாழவேண்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக திருநங்கைகள் இருந்தாலும், மிரட்டி பணம் பறித்து செல்லும் திருநங்கைகள் கூட்டம்தான் அதிகம் என்றே சொல்லலாம்.
மதுபானக் கூடங்கள், ரயில்கள் வணிக நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் வந்து பணம் கேட்டு தொல்லை செய்வதும் தராவிட்டால் முகம் சுளிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு வந்த திருநங்கைகள் மீது பலர் புகார் அளிப்பதில்லை. ஆனால் சமீப காலங்களில் தானாக முன்வந்து திருநங்கைகளுக்கு எதிராக புகார் கொடுப்பதும் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் செய்திகளும் வெளியாகின்றன.
தற்போது வந்து கொண்டு இருப்பது மற்றவர்களுக்கும் ஒரு ஊக்கமாக அமையும். இனிமேலாவது அடுத்தவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டி பணம் பறித்து வாழாமல் உழைத்து வாழ ஆரம்பித்தால் திருநங்கைகளுக்கு இந்த சமுதாயம் சிவப்பு கம்பளம் விரிக்கும் என்பதில் ஐயமில்லை