சூப்பர் ஸ்டாருடன் மோதல்! நயன்தாராவுக்கு படங்களில் நடிக்க தடை?

தமிழகத்தில் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ள நடிகை நயன்தாராவுக்கு தெலுங்கு திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர் சிரஞ்சீவி கதாநாயகனா நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படம் தயாராகி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். திரைப்படத்தை சிரஞ்சீவி மகன் ராம் சரண் படத்தை தயாரித்துள்ளார். பல கோடி ரூபாய் செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதால் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என நயன்தாராவிடம் ராம் சரண் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து அடுத்த மாதம் ரீலீஸ் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக விளம்பர நிகழ்ச்சியில் அதாவது புரோமேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டதாகவும் புது பிரச்சனை கிளம்பி உள்ளது. இதனால் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் டென்ஷனாகி விட்டதாக தெரிகிறது.

ஒரு படத்தின் வெற்றி அந்த படத்தின் கதையை பொறுத்தே அமைவதாகவும் விளம்பரத்தால் படம் ஓடுவது இல்லையெனவும் நயன்தாரா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்து தெலுங்க திரைப்படத்தில் நயன்தாரா நடிக்க தடை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. 

பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் எந்த படத்திற்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் தடை விதித்தால் என்ன? தமிழ் ஒன்றே போதும் என்ற நம்பிக்கையுடன் நயன்தாரா !