இன்றைய பேட்டியில் ரஜினி ஏன் டென்ஷன் ஆனார்?- பேச்சில் தடுமாற்றம் ஏன்.. நடந்தது என்ன? வரிக்கு வரி படியுங்கள்

வருமான வரி தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் இரஜினிகாந்த் திடீரென இன்று காலையில் தன் வீட்டின் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் சில கேள்விகள் அவருக்கு ரசிக்கும்படியாக இல்லை. அதற்கு மழுப்பலாகவும் தடுமாற்றத்துடனும் பதில் அளித்தார். கடைசியாகக் கேட்ட கேள்வியால் டென்ஷன் ஆன இரஜினி, அதற்கு பதில்கூறாமல் பேட்டியை முடித்துக்கொண்டார்.


இரஜினியின் பேட்டியில் நடந்தது இதுதான்.

”தூத்துக்குடியில் சமூக விரோதினு சொன்னது தொடர்பாக சம்மன் வந்திருக்கிறதே.. அது பத்தி என்ன சொல்றீங்க..?” 

”எனக்கு இன்னும் நோட்டீஸ் வரலை.. அது வந்த பிறகு முழு ஒத்துழைப்பு குடுப்பேன்.”

”ஏற்கெனவே தூத்துக்குடி பத்தி சமூகவிரோதினு எப்படி சொன்னீங்கனு கேட்டபோது..அப்படி சொல்லலைனு சொன்னீங்க.. அரசாங்கம்கூட அதக்கு முன்னாடி சொல்லலை.. இதுக்கு எப்படி விளக்கம் குடுப்பீங்க?” 

”(சிரித்துக்கொண்டே..) அதுக்காகத்தான் அவங்க சம்மன் அனுப்பிச்சிருக்காங்க.. நான் அவங்களுக்கு குடுக்கிறேன்.. ஓகே”

”குடியுரிமைச் சட்டம் பத்தி.. மதத்தின் அடிப்படையில குடியுரிமை தருவது பத்தி இரஜினிகாந்த் எதுவும் சொல்லலையே?” 

”பாருங்க இப்போ என்பிஆர் (தேசிய மக்கள்தொகை பதிவேடு) ரொம்ப அவசியம்னு ரொம்பத் தேவை. 2010லயும் காங்கிரசுலயே பண்ணியிருக்காங்க.. 2015-லயும் பண்ணியிருக்காங்க. 2021லயும் பண்ணனும். என்பிஆர் (தேசிய மக்கள்தொகை) எடுத்துதான் ஆகணும். அதுல யார் வெளிநாட்டுக்காரங்க.. யார் முழுவதும் வெளிநாட்டுக்காரங்க..யார் உள்நாட்டுக்காரங்க.. யார் யார் எந்த நாட்டுக்காரங்கனு தெரியவேண்டாமா..அது ரொம்ப அவசியம்.. அது எடுத்துதான் ஆகணும்.. அதுல மத்தவங்களுக்கு என்ன பிரச்னைனு தெரியல..

என்சிஆர் (தேசிய குடிமக்கள் பதிவேடு) இன்னும் அமல்படுத்தல.. அதப்பத்தி அவங்க யோசனை பண்ணிகிட்டு இருக்காங்க.. யோசனை பண்ணும்போது... அதோட டிராப்ட்(வரைவு..) (புரொசீடிங்) தொடர் நடைமுறை.. அதெல்லாம் தெரிஞ்ச பிறகுதான் அது என்னா எப்படிங்கிறது இருக்கும்.. சிஏஏ ..(குடியுரிமைச் சட்டம்) பத்தி அவங்க தெளிவா சொல்லிட்டாங்க.. கட்டாயமா இந்தியா வாழும் மக்களுக்கு எந்த பிரச்னையும் கெடையாது.

அவங்க குடியுரிமை போறது எதுவும் கெடையாது. மத்தா நாட்டு.. பக்கத்தில இருக்கிற நாட்டுல இருந்து வர்றவங்களுக்கு குடுக்கிறதா இல்லையானுதான் பிரச்னை.. முக்கியமா இசுலாமிய மக்களுக்கு பெரிய ஒரு அச்சுறுத்தல்னு அந்த ஒருமாதிரியா பீதிய கெளப்பிட்டாங்க.. முசுலிம்களுக்கு எப்படி அது அச்சுறுத்தல்.. பாத்தீங்கன்னா, இசுலாமிய மதத்துக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்குதுன்னா.. அந்தப் பிரிவினை காலத்துல பாத்தீங்கன்னா அங்க இசுலாமியர்கள் போகணும்னு அங்க போறோம்னு சொல்லி இசுலாமியர்கள் போனாங்க..இங்க இருக்கிற இசுலாம்கள் போனாங்க.. நாம இதுதான் நாடு..

நம்ம ஜென்ம பூமி இதுதான் .. இதுதான் நம்ம மண்ணு.. செத்தா இங்கதான் சாவோம் வாழ்வோம்னு வாழ்ந்திட்டிருக்கிறவங்க அவங்க.. அவங்களுக்கு எப்டி இந்த நாட்டுல இருந்து வெளியில அனுப்பமுடியும்.. அந்தமாதிரி ஏதாவது வந்தா இந்த இரஜினிகாந்து முதல்ல குரல்குடுப்பேன்.. அவங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கெடையாது. இது சில அரசியல் கட்சிகள் அவங்களோட சுயலாபத்துக்காக சுயநலத்துக்காக தூண்டிவிட்றாங்க.. மத குருக்களும் துணைபோறாங்க.. இது ரொம்ப ரொம்ப தப்பான விசயம்.. இதில முக்கியமான இந்த மாணவர்கள் wஆன் சொல்லிக்கொள்வதெல்லாம்.. ஏதாவது போராட்டத்தில எறங்கும்போது தீர ஆராய்ஞ்சு உங்க பேராசிரியர்கிட்ட பெரியவங்ககிட்ட கேட்டு எறங்குங்க..இல்லைனா அரசியல்வாதிங்க உங்களைப் பயன்படுத்திக்கப் பாப்பாங்க..எறங்கிட்டீங்கன்னு சொன்னா உங்களுக்குதான் பிரச்னை.. போலீசு யார் எப்படி இருப்பாங்கனு தெரியாது. ஏதாவது வந்து எஃப்.ஐ.ஆர். போட்டாங்கன்னா வாழ்க்கையே முடிஞ்சுபோகும். அதை நீங்க பாத்துக்கங்க..”

”சிஏஏ-ல இலங்கை தமிழர்களுக்கு இடமில்லையே..மத அடிப்படையில அவங்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுதே.. எப்படி பாக்கிறீங்க?”

” இலங்கை அகதிகள் இருக்காங்க இல்லையா.. 30 வருசமா இருக்காங்க.. அவங்களுக்கு இரெட்டை உரிமை கொடுக்கணும்.. இங்க இருக்கிறவங்களுக்கு கொடுக்கணும். குடியுரிமைச் சட்டத்தில அங்க இருக்கிறாங்கள தொந்தரவு தரக்கூடாது. அங்க இருக்கிறவங்கள மைனாரிட்டுனு எடுத்துக்கிட்டு ....பண்ணா அங்க வந்து அவங்கள ....பண்ணுவாங்க.. சோழன் காலத்தில இருந்து இருக்காங்க.. அங்கவந்து ... 

”வருமான வரித்துறையில உங்களுக்கு அபராதம் விதிச்சிருக்காங்க...அதப்பத்தி?” 

“நான் ஒரு நேர்மையா வருமான வரி கட்டுறவன்கிறது வருமான வரித் துறைக்கு தெரியும்..” எனக் கூறிவிட்டு,  

அடுத்தடுத்த கேள்விகளைத் தவிர்த்துவிட்டு காரில் ஏறினார்.