தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது! எடப்பாடிக்கு திடீர் பாராட்டு பத்திரம் வாசித்த டிடிவி! படுபயங்கர ஷாக் ஆன தொண்டர்கள்!

திராவிடர் கழக கூட்டத்தில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியிருக்க கூடாது. அவதூறாக பேசினால் வழக்கு தொடரலாமே தவிர தாக்குதல் நடத்த கூடாது.


தமிழகம் அமைதி பூங்கா இது போன்ற தாக்குதல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். தாக்குதல் நடத்துபவர்களுக்கு தான் இது ஆபத்தாக முடியும். தோல்வி பயத்தின் காரணமாக அமைச்சர்களை விமர்சனம் செய்பவர்கள் மீது ஆளுங்கட்சியினரால் வழக்கு தொடுக்கப்படுகிறது.

துரை முருகன் வீட்டில் கட்டு கட்டாக பணம் வைத்திருந்தது தவறு தான். தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளை மட்டும் குறி வைத்து சோதனை செய்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு ஒரு அளவுகோள் எதிர்கட்சிக்கு ஒரு அளவுகோள் வைத்து தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அவர்கள் ஆளுங்கட்சியையும் சோதனை செய்ய வேண்டும்.

திருச்சியில் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேட்டி.