வீட்டில் ஏசி போட்டு உறங்கிய 3 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்! பதற வைக்கும் காரணம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏசியில் பிடித்த தீ காரணமாக 3 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது காவேரிப்பாக்கம். இங்குள்ள சுப்பராயன் தெருவில் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் ராஜு. 60 வயதான இவர் அதே பகுதியில் தனது வீட்டில் இரண்டு மகன்கள் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

மூத்த மகனும் மருமகளும் தனி அறையில் படுத்துக் கொள்ள வெயில் கொடுமை காரணமாக ஒரே அறையில் ராஜு அவரது மனைவி கலா மற்றும் இளைய மகன் கவுதம் ஆகியோர் ஒரே அறையில் ஏசி போட்டு படுத்து வழங்கியுள்ளனர். நேற்று இரவு ராஜூ உறங்கிய அறையில் திடீரென ஏசியில் தீப்பிடித்துள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மூன்று பேராலும் இதனை அறிந்து கொள்ள முடியவில்லை. மளமளவென பரவி ஏத்தி அரை முழுவதும் புகை மூட்டத்துடன் எரியத் தொடங்கியது. இதனால் மயங்கிய நிலையிலேயே மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். காலையில் எழுந்து வீட்டிற்குள் புகை மண்டலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜுவின் மற்றொரு மகனான கோவர்தன் தந்தை அறையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஏசியில் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.