டைம்ஸ் தமிழ் 2019 சினிமா விருதுகள். சிறந்த கலைப்பட விருது எந்தப் படத்துக்கு?

மூன்றாவது ஆண்டாக டைம்ஸ் தமிழ் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் 2019வது ஆண்டுக்கான சிறந்த கலைப்படத்துக்கு விருது வழங்குவதில் பெருமைப்படுகிறது டைம்ஸ் தமிழ் நிறுவனம். ஏராளமான திரைப்படங்கள் 2019ம் ஆண்டு வெளியானாலும், கலைத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சி என்று பார்த்தால் உருப்படியாக எதுவும் தேறவில்லை.

விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தால் பார்த்திபனின் ஒத்தசெருப்பு, நெடுநல்வாடை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, அழியாத கோலங்கள் 2 ஆகிய படங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன.

இதில், பார்த்திபனின் சொந்த அரிப்புதான் ஒத்த செருப்பு படத்தில் தெரிகிறது. அழியாத கோலங்கள் 2, நெடுநல்வாடை போன்றவை நல்ல கருத்து இருந்தாலும், அழகியல் தன்மை கொஞ்சமும் இல்லை. இதனைத் தாண்டி நிற்பது இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு மட்டும்தான்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டுக்கான தேடுதல் வேட்டையுடன் ஆணவக் கொலை குறித்தும் சவுக்கடி கருத்துக்கள் படத்தில் இடம் பெற்று இருப்பதால், கவனிக்கத்தக்க படமாக மாறுகிறது. ஒரு லோக்கல் படத்தில் சர்வதேச அரசியலை புகுத்தியிருக்கிறார். படம் வெற்றி பெறாமல் போனதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம். எப்படியாயினும் கவனிக்கத்தக்க படத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் பா.ரஞ்சித், இயக்குனர் அதியன் ஆதிரை ஆகியோர் பாராட்டக்கூடியவர்கள். 

அதனால், 2019 ஆண்டின் சிறந்த கலைப்படமாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை டைம்ஸ் தமிழ் தேர்வு செய்து விருது வழங்கி கெளரவிக்கிறது.

வாழ்த்துக்கள் ரஞ்சித்.