லைக்ஸ்களை அள்ள நிஜ துப்பாக்கியுடன் டிக்டாக் வீடியோ..! திடீரென வெடித்து மூளை சிதறிய ராணுவ வீரர் மகன்! பதற வைக்கும் சம்பவம்!

லக்னோ: டிக்டாக் வீடியோ தயாரிப்பதற்காக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இளைஞர் உயிரிழந்தார்.


உத்தரப் பிரதேச மாநிலம், பரேய்லி மாவட்டம், ஹபிஸ் காஞ்ச் பகுதியை சேர்ந்தவர் கேஷவ். 18 வயதான இவர், 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது தந்தை ராணுவத்தில் பணிபுரிவதால், வீட்டில் துப்பாக்கி வைத்திருந்துள்ளார். டிக்டாக் அடிமையான கேஷவ், லைக் வாங்குவதற்காக பலவிதமான வீடியோக்களை தயாரித்து வெளியிடுவது வழக்கமாகும்.

இதன்படி, தனது தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது துப்பாக்கியை எடுத்து, டிக்டாக்கில் வீடியோ எடுத்து வெளியிட முயன்றுள்ளார். அப்போது, விளையாட்டு விபரீதமான நிலையில், துப்பாக்கி வெடித்து, கேஷவ் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி வரும் இந்திய இளைஞர்கள் இந்த சம்பவத்தை பார்த்தேனும் மனம் திருந்துவார்களா?...