பரபரப்பான ரோடு! கூட்டம் கூட்டமாக மக்கள்! திடீரென சொந்த ஜீப்பை தீ வைத்து எரித்த முரட்டு மனிதர்! அதிர வைக்கும் காரணம்!

குஜராத் மாநிலத்தில் திடீரென்று சாலையில் நின்று கொண்டிருந்த ஜீப்பை மர்ம நபர் ஒருவர் கொளுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் மிகுந்த டிராபிக் இருக்கும் சாலையில் நின்று கொண்டிருந்த ஜீப் ஒன்றை அருகில் வாகனங்கள் சென்று கொண்டு இருக்கிறது என்பதை கூட அறியாமல் கழுத்து முழுவதும் தங்க நகைகள் அணிந்த விசித்திர நபர் ஒருவர் திடீரென்று பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார்.

எரிந்து கொண்டிருந்த அந்த ஜீப் இன் அருகே பல்வேறு வாகன ஓட்டிகள் பதறியவாறு வாகனத்தை ஓட்டிச் சென்று உள்ளனர். இந்த செயலை செய்தவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரை சேர்ந்த ராஜேந்திர சிங் என்பது தெரியவந்து உள்ளது மேலும் இவரது இந்த வீர தீர செயலை அவரது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் விசாரணையில் குற்றவாளிகளை காவல்துறையினரால் ஈஸியாக கண்டறிய முடிந்தது.

இதை அடுத்து நெருப்பினை பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கையாண்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி ராஜேந்திர சிங் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் ஜீப்பை கொடுத்து இதற்கான காரணமாக விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அவரது நண்பர்களுக்கு ஜீப்பை தர வாக்குறுதி அளித்திருந்த நிலையில், என்ஜின் கோளாறு செய்ததால் ஆத்திரமடைந்த அவர் ஜீப்பிற்கு தீ வைத்ததாகவும், அதனை எரிப்பதற்கு முன் சமூக வலை தளத்தில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்று நினைத்து அதை டிக்டாக்கில் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.