சிங்கிள்னு சொல்லி என் கணவன் பல பெண்களுடன் மிங்கிள் ஆகிறார்..! காரணம் அந்த டிக் டாக்..! மனைவி சுகன்யா வெளியிடும் பகீர் வீடியோக்கள்!

கடலூர் அருகே, டிக்டாக் மூலம் மயக்கி இளம் பெண்களை கடத்திச்செல்லும் மன்மதன் ராஜசேகர் என்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வசிக்கும் மன்மதன் ராஜசேகர் வசித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு சுகன்யா என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், மது போதையில் மனைவியிடம் அடிகடி சண்டை போட்டு கொண்டு இருப்பவர் ராஜசேகர்.

இதற்கிடையில், டிக்டாக் மூலம் பல பெண்களை மயக்கி காதல் வலையில் வீழ்த்தி காதல் மன்னன் போல் வலம் வந்துள்ளார். மேலும், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட ராஜசேகர், தன்னை ஒரு திரை நாயகனாக நினைத்துக் கொண்டு டிக்டாக்கில் செய்த நாடக காதல் வெறித்தனத்திற்கு பல டிக்டாக் ஏமாளி பெண்கள் சிக்கி உள்ளார்கள்.  

இந்த நிலையில், ராஜசேகர் அறந்தாங்கி ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த கவிநயா என்ற பெண்ணை டிக்டாக்கில் மயக்கி வீட்டில் இருந்து அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறந்தாங்கி காவல்துறையினர் புதுக்கோட்டை மாவட்டம் சுகன்யாவின் வீட்டுக்கு சென்ற போது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே சுகன்யா கணவர் டிக்டாக் மூலமாக தன்னை சிங்கிள் என கூறிக்கொண்டு பல பெண்களுடன் மிங்கிள் ஆவதாக பண்ருட்டி காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அங்குள்ள காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்த நிலையில் ராஜசேகர், தற்போது புதிதாக ஒரு பெண்ணை தூக்கி சென்றுள்ளதாக ஆதங்கம் கொள்கிறார் சுகன்யா.

இதனைடுத்து, டிக்டாக்கை தடை செய்ய கோரியும், தனக்கும் குழந்தைக்கும் உரிய பாதுகப்பு அளிக்க கோரியும் காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்துள்ளார் சுகன்யா.