பைக்கில் பயணித்துக் கொண்டே குத்துப்பாட்டுக்கு டிக்டாக்! எதிரே வந்த டிரக்! மச்சான்-மாமனுக்கு நேர்ந்த பயங்கரம்!

ஒடிஷாவில் இருசக்கர வாகனத்தில் டிக்டாக் செய்தபடி வாகனத்தை இயக்கிய இளைஞ்சர்கள் எதிரே வந்த வாகனத்தில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார்.


ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த பெர்ஹாம்பூரில், இளைஞர்கள் ஷிப சங்கர் சாஹு என்பவர், தனது மைத்துனருடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதற்கிடையில், இருவரும், டிக்டாக்கில் வீடியோ ஒன்று எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.  

யாரும் எதிர் பார்க்காத சமயத்தில் கஜுரியா என்ற பகுதியில் இளைஞ்சர்கள் சென்ற வாகனத்தின் மீது, டிரக் ஒன்று திடீரென மோதியதில், விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருவருமே படுகாயமடைந்தார்கள். மேலும், இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் ஷிப சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மைத்துனர் சிப பாட்ரோ ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இளைஞ்சர்களின் பெற்றோர்கள், கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.