மனைவியுடன் ஆசை ஆசையாக பேசிக் கொண்டிருந்த ராணுவ வீரர்! செல்போனால் நொடியில் நேர்ந்த பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!

ராஜஸ்தான் மனைவியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ராணுவ வீரர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இந்தியா ராணுவத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் தம்பா பைராகி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக ராஜஸ்தானில் தங்கி தம்பா பைராகி பணிபுரிந்து வரும் நிலையில் செல்போனில் அடிக்கடி மனைவியிடம் பேசுவது வழக்கம். கடந்த வெள்ளிக் கிழமை அன்று வழக்கம் போல் செல்போனில் தம்பா பைராகி பேசும்போது அப்போது அவரது மொபைலில் மின்னல் தாக்கி உள்ளது.

இதனால் நிலை குலைந்த தம்பா பைராகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதிர் முனையில் கணவர் பேசாமல் திடீரென துண்டித்ததை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவர் உயிரிழந்த சம்பவம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த ராணுவ வீரருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. 

பொதுவாகவே வெட்ட வெளியில் மழைக் காலங்களில் செல்போனில் பேசுவது ஆபத்தான விஷயமாக இருக்கும். ஏனெனில் செல்போன் சிக்னல் மூலம் மின்னல் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.