கற்களை வீசி தாக்கு! இரண்டு கிராமம் கொண்டாடும் ரத்தத் திருவிழா!

மத்திய பிரதேச மாநில சிந்த்வாரா மாவட்டத்தில்,இரண்டு கிராமத்து மக்கள் ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து 'கோட்மார்' என்கிற பெயரில் ஒரு விழா நடத்துகிறார்கள்.


நூற்றுக் கணக்கானோர் மண்டைகள் உடைபடும் இந்த திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பும் உண்டாம். சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பாண்டூர்னா என்கிற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் ஜாம் ஆற்றின் அக்கரையில் இருக்கும் ஸ்வர்கான் கிராமத்துப் பெண்ணை அழைத்துக்கொண்டு ஓடி விட்டானாம்.

அந்த காதலுக்கு அவனது ஊர்காரகளும் உதவி செய்தார்களாம்.இதனால் ஆத்திரமடைந்த மணமகளின் ஊர்காரர்கள் மணமகனின் ஊருக்குள் புகுந்து கல்வீசி தாக்கினார்களாம்.அதன் நினைவாக வருடம் தோறும் இரண்டு கிராமத்து மக்களும் கற்களால் அடித்துக்கொள்கிறார்கள்.ஜாம் ஆற்றின் நடுவில் ஒரு கொடி நடப்படும்.

இரு கிராமத்து மக்களும்,ஆற்றின் எதிரெதிர் கரைகளில் இருந்து இறங்கி ,அந்தக் கொடியை எடுக்க முன்னேறுவர்.அப்போது ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கி கொள்வர்.அதைத் தாண்டி கொடியை கைப்பறிய கிராமம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதற்கு மத்திய பிரதேச போலீஸ் பாதுகாப்புக் கொடுக்கிறது.

குடித்து விட்டு வருபவர்களை அனுமதிப்பதில்லை.ட்ரோன்களைப் பயன்படுத்தி யாராவது உண்டிவில்லை பயன்படுத்தி அடிக்கிறார்களா என்று கண்காணிக்கிறது. அப்படி உண்டிவில்லால் அடிப்பவர்களைக் கைது செய்து வழக்கு பதிவு செய்கிறது.

நேற்று நடந்த கல்லெறி விழாவில் இருதரப்பிலும் சேர்த்து 400 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.இரண்டு பேருக்கு கண்ணில் அடிபட்டு இருக்கிறதாம்.