கொரோனாவில் இருந்து சீனா மீளக் காரணம் இந்த பாரம்பரிய மருந்து தான்..! ரகசியத்தை உடைத்த தமிழ் பேசும் சீனப் பெண்!

கொரோனாவிலிருந்து பாரம்பரிய மருந்து மற்றும் உணவு முறையை தங்களை காப்பாற்றுவதில் பெரிதும் உதவியதாக சீன தமிழ் ஊடக பெண் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ள.

இந்த நோயினால் முதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது சகஜ நிலையை அடைந்துள்ளனர். எவ்வாறு அவர்கள் இந்த வீரிய நோய் தாக்குதலில் இருந்து மீண்டனர் என்பது குறித்து தமிழ் சீன ஊடக பெண்ணான இலக்கியா கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் கூறியதாவது: "கொரோனா வைரஸ் தாக்குதல் சீனாவை பெரிதளவில் பாதித்தது. சீன அரசாங்கம் முதன்முதலில் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. பாதிக்கப்பட்டவர்கள் உடனிருந்தோரையும் உடனடியாக தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நோய் தாக்குதல் வீரியம் அடைந்ததை தொடர்ந்து எங்கள் அதிபர் முழு ஊரடங்கை அறிவித்தார். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பை நல்கினோம். எங்களுடைய பாரம்பரிய மருத்துவமுறையை பாதாம் மற்றும் புதினா ஆகியவற்றை கூடிய சித்த மருத்துவ உணவை மருத்துவ ஆலோசனைப்படி நாங்கள் சாப்பிட்டு வந்தோம். 

மேலும் தற்போது கூட முகக்கவசம் அணிந்து தான் வெளியே செல்கிறோம். உரையாடும் போது கூட சமூக விலகல்களை கடைபிடித்து தான் செல்கிறோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த வீரிய தாக்குதலில் இருந்து மீண்டு வர இயலும் என்பதை சீனர்கள் நிரூபித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.