மாட்டுக்கறி சாப்பிட்டா அடிக்க வர்றாங்களா! ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் மோடி ஆட்களுக்கும் இதுதான் பதில்!

மாட்டு மூத்திரம் குடித்தால் மாபெரும் நன்மை என்று சொல்லும், பா.ஜ.க.வினர், மாட்டுக் கறி சாப்பிடுபவர்களை அடித்துத் துவைக்கும் சம்பவம் நாடெங்கும் நடந்துவருகிறது.


அப்படிப்பட்ட நபர்களுக்கு மாட்டு மூத்திரத்தில், மாட்டு சாணத்தில் மட்டுமின்றி மாட்டுக் கறியிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளது என்று எடுத்துக்கூறுங்கள். மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ் உள்ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது. 

மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக் களை கொடுத்தாலும் குறைந்த அளவு கலோரிகள் தான் அளிக்கிறது. 100 கிராம் மாட்டுக்கறியில் 250 கலோரிகள் தான் உள்ளன என்றாலும், பத்து சதவிகிதத்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவையானது மாட்டுக்கறிதான்.

 மாட்டுக்கறியின் சிகப்பிறைச்சி பகுதியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும்.  மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை  அதிகரிக்கிறது. அதனால் இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை.

தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சிக் கொள்கிறது.  ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 என்பது 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது. 

இத்தனை சத்துக்கள் இருப்பதால் இதனை பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டனும் சாப்பிடவேண்டும் என்று மோடி அறிவிப்பதுதான், நாட்டுக்கும் அவர் கட்சிக்கும் நல்லது.