நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலிட் செய்த அனிசா! விஷால் திருமணம் நின்று போக காரணம் அந்த நடிகை தானாம்!

நடிகர் சங்கம் கட்டி முடித்து, அங்குதான் என்னுடைய திருமணம் நடைபெறும் என்று விஷால் வீராவேசமாக அறிவித்தார். நடிகர் சங்கம் கட்டி முடித்தாலும் முடிந்துவிடும், விஷால் திருமணம் நடக்காது போலிருக்கிறது.


ஆம், நடிகர் விஷால் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த நிலையில் திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரத்துக்குக் காரணமாக விஷால் தான் சுட்டிக்காட்டப்படுகிறார்.

நடிகர் விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். பெருத்த கோடீஸ்வர குடும்பம் என்பதால் விஷாலும் ஆர்வமாக இருந்தார்.

ஆனால், திடீரென விஷாலுக்கு நிச்சயம் செய்யப்பட்ட அனிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார். 

இதுகுறித்து கேள்வி கேட்டபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறினாராம். என்னாச்சு என்று விசாரித்தால், திருமணம் முடிவு செய்யப்பட்ட பிறகும் ஒரு நடிகையுடன் நான்கு நாட்கள் உல்லாச டூர் போனாராம். அந்த புகைப்பட ஆதாரம் கையில் கிடைத்ததாலே, இப்படியொரு அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாம்.

விஷாலுக்கு இன்னும் குறும்பு போகலையே.