திருவண்ணாமலை: சாலை விபத்தில் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் லேசான காயமடைந்தார்.
திடீரென குறுக்கே வந்த பைக்..! சடன் பிரேக் போட்ட டிரைவர்..! பல்டி அடித்த காரில் இருந்த திமுக எம்எல்ஏவுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணியில் பங்கேற்பதற்காக, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இன்பசேகரன், அவரது காரில் இன்று
(அக்.,17) புறப்பட்டுச் சென்றார். திருவண்ணாமலை வழியாக, வேட்டவலம் சாலையில் சென்றுகொண்டிருந்த அவர், ராஜாமங்கலம் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காகக் காரை திடீரென நிறுத்த முயன்றுள்ளார்.
இதில், வேகமாகச் சென்ற கார் நிலைதடுமாறி, கீழே கவிழ்ந்ததால், எம்எல்ஏ இன்பசேகரன், முகம், தாடை உள்ளிட்ட இடங்களில் லேசான காயமடைந்தார். உடனடியாக, அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதேசமயம், எதிரே வந்த இருசக்கர வாகன ஓட்டிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறப்படுகிறது.