பட்டப்பகல்! முழு போதை! காக்கி உடையில் தள்ளாடிய போலீஸ்! எதிரே வந்த பெண்மணிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

திருப்பூர் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த காவலர் பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். பின்னர் நிற்காமல் சென்ற காவலர் வேகத்தடையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கியுள்ளார் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ள பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் மயில்சாமி பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், திங்கட்கிழமை அன்று அதாவது நேற்று மாலை குடித்துவிட்டு முழு போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளார் மயில்சாமி. 

அப்போது சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்த பெண்மணியின் மீது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார் காவலர் மயில்சாமி. பின்னர் மயில்சாமியை துரத்திக்கொண்டு சென்றுள்ளார்கள் இளைஞர்கள்.

இந்த நிலையில், சாலையில் இருந்த வேகத்தடையில் தடுக்கி கீழே விழுந்துள்ளார் காவலர். அப்போது அங்கு இருந்த பொது மக்கள் அனைவரும் அவரை பிடித்து வசைமாரி பொழிந்தனர்.

பின்னர், மயில்சாமியை பெருமாநல்லூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தவர்கள் பொதுமக்கள், ஆனால் காவலர் மீது எவ்வித புகார் கொடுக்காத நிலையில் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.