அதிவேகம்! குட்டிக்கரணம் அடித்து தீ பிடித்த சொகுசு கார்! ஒரே குடும்பத்தின் 5 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்!

கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


ஆந்திர பிரதேசம் திருப்பதி தேவஸ்தானத்தில் உதவியாளராக பணிபுரியும் விஷ்ணு என்பவர் மனைவி குழந்தைகள் மற்றும் தங்கை என மொத்தம் 5 பேருடன் பெங்களூருக்கு இன்று காலை சென்று கொண்டிருந்தார் .

அப்போது இவர்களது கார் சித்தூர் மாமடுகு பகுதியில் சென்று வேகமாகச் சென்று கொண்டிருக்கையில், கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை அருகே உள்ள சுவற்றில் மோதி கவிழ்ந்தது. கவிழ்ந்த அடுத்த நிமிடமே கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இச்சம்பவம் நடந்த இடத்தின் வழியாக சென்று கொண்டிருந்த சிலர் விரைந்து வந்து காரில் உள்ளே சிக்கியவர்களை மீட்க முயற்சித்தனர். அதில் விஷ்ணு மட்டுமே காப்பாற்றப்பட்டார்.அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயம் ஏற்பட்ட விஷ்ணு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.