பொள்ளாச்சி சம்பவம்! மாணவிகளை சமாதானம் செய்த பெண் இன்ஸ்பெக்டர் தூக்கில் பிணமாக தொங்கினார்!

விழுப்புரம் மாவட்டத்தில் பெண் ஆய்வாளர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்துவரும்  ஜெய்ஹிந்த் தேவி கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். மற்றும் இவரது கணவர் அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கணவர் வீட்டில் இல்லாத போது ஜெய்ஹிந்த் தேவி  தனது வீட்டில்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த கணவர்  கதவு பூட்டி இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

கதவை தட்டியுள்ளார் கதவு திறக்கப்படாத நிலையில் உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெய்ஹிந்த் தேவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்த அவரது கணவர் உடனே அருகிலிருந்தவர்களுக்கு தகவலை தெரிவித்தார். பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த திண்டிவனம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சனையா அல்லது  காவல் நிலையத்தில்  அவருக்கு  ஏதேனும்  பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? என இதுகுறித்து  விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். இதகிடையே கடந்த மாதம் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நெய்வேலியில் போராட்டம் நடைபெற்றது.

மாணவிகள் நடத்திய போராட்டத்தை ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தான் முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் அந்த மாணவிகள் மத்தியில் அந்த ஆய்வாளருக்கு நல்ல பெயர் இருந்தது. தற்போது அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து அந்த மாணவிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளது.