காதலித்த பாவம்! 3வது நாளாக மார்ச்சுவரியில் தவிக்கும் திலகவதி உடல்!

காதலித்த பாவத்திற்காக மாணவி திலகவதியின் உடலை மூன்றாவது நாளாக மார்ச்சுவரியில் தவித்து வருகிறது.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கடந்த வியாழக்கிழமை அன்று திலகவதியின் அம்மாணவியை வீடு புகுந்து அவரது காதலன் ஆகாஷ் குத்திக் கொலை செய்தான். காதலன் ஆகாஷ் கல்லூரிக்கு முறையாக செல்லாமல் நண்பர்களுடன் ஊதாரித்தனமாக சுற்றி திரிந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த திலகவதி காதலனை திருத்த வேண்டும் என்பதற்காக அவருடன் சில நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். இது குறித்துப் பேசுவதற்காக திலகவதி வீட்டுக்குச் சென்ற ஆகாஷ் வாக்குவாதம் முற்றிய நிலையில் கத்தியால் திலகவதியை குத்திக் கொலை செய்து விட்டு தப்பியுள்ளான். அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

கொலை செய்த காதலன் ஆகாஷ் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவன். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆகாசுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திலகவதியின் உறவினர்கள் மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தண்டனை குறித்த உறுதியான அறிவிப்பு வந்த பிறகுதான் திலகவதியின் உடலை வாங்குவோம் என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.

இதனால் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் திலகவதி முதல் மூன்று நாட்களாக நடத்தப்பட்டுள்ளது. ஒருவனை உண்மையாக காதலித்த பாவத்திற்காக கொலை செய்யப்பட்டதுடன் மரணத்திற்கு பிறகும் கூட திலகவதியின் உடல் இப்படி மார்ச்சுவரியில் தவிர்த்து வருவது கேட்போரை முழுக்க வைப்பதாக உள்ளது.