எடப்பாடியர் பெயரில் புது நகர் வந்துவிட்டது , துணை முதல்வர் மட்டும் சும்மா இருக்கலாமா?

தமிழக முதல்வராக யார் வந்தாலும் அவர்கள் பெயரில் நகர், தெருவை உருவாக்குவது தமிழன் வழக்கம்.


அப்படித்தான் அண்ணா நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், ஜெ.ஜெ.நகர் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தகட்டத்தில் நீண்ட நாட்கள் முதல்வராக இருக்கும் எடப்பாடி பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

ஆம், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரில் புதிய நகர் உருவாக்கப்பட்டுள்ளது. . ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட தோப்புப் பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய புதிய குடியிருப்பு பகுதி உருவாக்கப்பட்டது. இந்த நகருக்கு "எடப்பாடியார் நகர்" என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் பெயர் சூட்டி திறந்து வைச்சார்.

எடப்பாடியாருக்கு ஒரு நகர் வந்தபிறகு, துணை முதல்வர் மட்டும் சும்மா இருக்கலாமா? யாராவது சீக்கிரமா பன்னீர் நகர் ஒன்றை தொடங்குங்கப்பா..