தேர்தலுக்கு முன்னாடியே மக்களை மறந்துட்டாங்கப்பா! என்னா கூட்டம்! கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் போக 6 மணி நேரம்!

தேர்தலில் ஓட்டு போடும் வரையிலும் வாக்காளர்களை ராஜாவாட்டம் கருதுவார்கள், அதன்பிறகு கண்டுகொள்ளவே மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், தேர்தலுக்கு முந்தைய தினமே மக்களை தவிக்க விட்டதுதான் புதிசு.


தேர்தலில் ஓட்டுப் போடவேண்டும் என்பதற்காக புதன்கிழமை காலைமுதல் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால், ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு ஓட்டுப் போட கிளம்பினார்கள்.

ஆனால், அரசு சொன்னபடி தமிழகத்தில் பஸ் எதுவும் கூடுதலாக கிளம்பவில்லை. மாலை 5 மணிக்கு பஸ்க்கு புக் பண்ணிய நபருக்கு இரவு 2 மணிக்குத்தான் பஸ் கிடைத்தது. அந்த பஸ் தாம்பரத்தைத் தாண்டுவதற்கு காலை 6 மணியாகிவிட்டது. 

இந்த நிலைதான் அனைத்துப் பக்கமும் காணப்பட்டது. ரயில், பஸ், லாரி, டூ வீலர் என கிடைக்கும் அத்தனை வாகனங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பிப் போய்க்கொண்டே இருந்தார்கள். ஆனால், கூடுதல் பஸ் விடுவதற்கு எந்த முன்னேற்பாடுகளும் நடைபெறவில்லை. 

அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் ஒரே வார்த்தையில், இத்தனை பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் தேர்தலுக்கு முன்பே இப்படின்னா தமிழனக்கு தேர்தலுக்கு அப்புறம் என்ன கிடைக்கப் போகுதோ..?