கட்டாயப்படுத்தி காவியை கழட்டுனாங்க! திருவாவடுதுறை தம்பிரான் புகாருக்கு, அவர் திருமணத்தை அம்பலப்படுத்தும் ஆதினம்!

நாகை மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற சைவ மடமான திருவாடுதுறை ஆதீனத்துக்கு உட்பட்டது திருவிடை மருதூர் மகாலிங்கசாமி கோவில்.


திருவாடுதுறை ஆதீனத்தின் கட்டளை தம்பிரான் என்ற முறையில் அந்த கோவிலையும் அதற்குட்பட நிலங்களையும் நிர்வகித்து வந்தவர் சுவாமிநாத தம்பிரான். இவர் உடல் நலம் சரியில்லாததால் தம்பிரான் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஆதீனம் சார்பில் சொல்லப்பட்டது.

இவருக்கு வழங்கப்பட்ட காவி உடை,உருத்திராட்சம் ஆகியவையும் பறிக்கப்பட்டு அவர் வெள்ளை உடையில் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து காசிக்குப் போன சுவாமிநாதத் தம்புரான் , திருவிடைமருதூர் மடத்தில் வெள்ளை வேட்டிகளின் ஆதிக்கம் இருப்பதாகச் சொல்லி மடத்தின் சொத்துக்களான் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிப்பதில்,அதிலிருக்கும் நீர் நிலைகளில் தூர் வாருவது போன்றவற்றில் ஊழல் இருப்பது போல சில கருத்துகளை கூறி,

இவற்றை தட்டிக் கேட்டதால் தன்னை வெளியேற்றி விட்டார்கள் என்பது போல சில கருத்துகளைக் கூறி இருந்தார்.காவி உடை அணிந்து ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டு இருக்கிறார்.அதில் கடந்த 15 ம் தேதி தன்னை ஆதீன மடத்துக்கு அழைத்து 5 காவி வேட்டிகள் புடை சூழ தன்னைக் கட்டாயப்படுத்தி சைவச் சின்னங்களை பார்த்துக்கொண்டு வெள்ளை உடை அணியச்செய்து வெளியேற்றி விட்டதாகச் சொல்லி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து திருவாடுதுறை ஆதீன மடாதிபதி ஸ்ரீ அம்பலவான தேசிகர் மடத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அந்த சந்திப்பில் பதவி விலக்கப்பட்ட கட்டளைத் தம்பிரான் சுவாமிநாதன் குறித்து சில அதிர்ச்சிகரமான தகல்வகளை சொன்னார்.சுவாமிநாத தம்பிரான் ஈரோட்டைச் சேர்ந்தவர்.

அவரது பூர்வாசிரமப் பெயர் சுப்பையா.துறவியகத் தீட்சை பெறுவதற்கு முன்பே பேச்சுத் திறனற்ற ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்.அந்தப் பெண்ணை விவாகரத்துச் செய்யவில்லை.கட்டளைத் தம்பிரான் ஆனபிறகும் அடிக்கடி வீட்டிற்குச் சென்று வந்திருக்கிறார்.

அதனால் தான் கடந்த 15ம் தேதி அவரை அழைத்து சைவச் சின்னங்களை ,மந்திர காஷாயங்களை அகற்றி அனுப்பினோம்.அவர் மீண்டும் காவி உடை அணிந்திருப்பது தவறு என்று சொல்லி இருக்கிறார். அம்பலவான தேசிகரின் கருத்துக்கு சுப்பையா என்கிற முன்னாள் கட்டளைத் தம்பிரான் சுவாமிநாத தம்பிரான் பதில் தருவாரா என்பதை தொடர்ந்தே இந்த விவகாரம் முடிவுக்கு வரும்