டீச்சர்களுக்கு சம்பளம் போடாமால் ஏமாத்துறாங்களாமே..? பள்ளி நிர்வாகிகளுக்கு மனசாட்சி இல்லையா..?

பத்தாம் வகுப்புக்கு தேர்வு வேண்டாம், அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வேண்டாம் குழந்தைகளுக்கு ஜூம் வகுப்புகள் வேண்டாம் இரைச்சல்கள் நடுவே, தனியார் பள்ளி ஆசிரியர்களின் அழுகுரல்களை கேட்க மறந்துவிட்டோம் நாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இதுபற்றி எழுதியிருக்கிரது.


ஆந்திராவில் நிறைய தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் நூறு நாள் வேலைகளுக்குச் சென்றுகொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலும் ஏறக்குறைய அதே நிலைதான். நிறைய தனியார் பள்ளிகள் மூன்று மாதங்களுக்கு மேலாக தங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அல்லது பாதி சம்பளம் மட்டுமே வழங்கியிருக்கின்றன. ஏற்கனவே அவர்கள் சம்பளம் அதிகபட்சம் பதினைந்தாயிரத்தைத் தாண்டாது. இப்போது அதுவும் மூன்று மாதங்களாக இல்லை என்பது எத்தனை சோகம்..?

லாக் டவுனுக்குப் பிறகு அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் விலை குறையவில்லை, சொல்லப்போனால் கூடவே செய்திருக்கிறது. இதுதவிர மின் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று யோசித்திருக்கிறோமா..?

மாணவர்களிடம் இருந்து கட்டணம் வாங்கும் வரையிலும், ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்பதுதான் நிர்வாகிகள் சொல்லும் செய்தி. ஆனால், இது பற்றி எந்த ஆசிரியரும் வெளியே மூச்சுகூட விட முடியாது. ஏனென்றால், எந்த நேரமும் இருக்கும் வேலையும் காலியாகிவிடும்.

இவர்களுக்கு அரசு என்ன செய்யப் போகிறது..? தற்காலிக ஆசிரியர்களை கவனிக்க வேண்டியதும் அரசின் பொறுப்புதானே...?