அமைச்சர் செல்லூர் ராஜூ ஜக்கு வயதாகி விட்டதாக நடிகை குஷ்பூ வருத்தம் தெரிவித்துள்ளார்.
தெர்மாகோல் ராஜுவுக்கு வயசாகிவிட்டது! நடிகை குஷ்பூ வருத்தம்!

அண்மையில் தேனியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று குஷ்பு பேசினார். குஷ்புவை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். இது குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட கூட்டம் கூடும் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் குஷ்புவுக்கு வயதாகிவிட்டது அவர் கிழவி ஆகி விட்டார் எனவே அவர் பேச்சை எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என்று செல்லூர் ராஜு தெரிவித்திருந்தார்.
இதற்கு நடிகை குஷ்பூ ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் செல்லூர் ராஜுவை தர்மாகோல் விஞ்ஞானி என்று விமர்சித்துள்ளார் குஷ்பு. மேலும் செல்லூர் ராஜூ வுக்கு வயதாகி விட்டதால் தான் ஏதேதோ பிதற்றிக் கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில்தான் கதாநாயகியாக நடிக்கும் காலம் முதல் தன்னை காண வரும் ரசிகர்களுக்கு நன்றி என்றும் குஷ்பு அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.