ஆபாச படம் பார்ப்பவர்களை கைது செய்ய முடியுமா? அவ்வளவு பெரிய ஜெயில் எங்கே இருக்குதுங்க?

இன்று கையில் இருக்கும் செல்போனில் எக்கச்சக்க கெட்ட படங்கள் கொட்டிக் கிடக்கின்றன.


அதனால் பல் முளைக்காத பாப்பாகூட, தப்பான படங்கள் பார்ப்பதற்கு வாய்ப்பு உண்டாகிறது.இந்த நிலையில், ‘நவம்பர் மாதம் ஒரே வாரத்தில் சுமார் 1500 பேர் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்திருப்பதாகவும், அவர்களுக்கு விரைவில் நீதிமன்றத்தில் தண்டனை வாங்கித் தரப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

செல்போன் அல்லது லேப்டாப்பில் வி.பி.என். மூலம் இணையத்தை பயனப்படுத்தினால் தங்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. காவல் துறையிடம், ஸ்பெஷல் தொழில்நுட்பங்களைக் கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும். அதனால் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, சிறை தண்டனை வாங்கித் தரப்படும் என்று ரவி தெரிவிக்கிறார்.  

ஆனால், இதுகுறித்துக் கூறும் கம்யூட்டர் நிபுணர் ஒருவர், ‘வி.பி.என். மூலம் இணையத்தில் நுழைபவர்களை அத்தனை எளிதில் கண்டுபிடிக்கவே முடியாது. அப்படியே கண்டுபிடிப்பதாக இருந்தாலும், அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் அடைப்பது நடக்கிற காரியமா என்று கேட்கிறார்கள்.

ரவி சார், பதில் சொல்லுங்க.