ஷூவுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு! காலில் அணிய சென்ற மாணவி! ஒரே நொடியில் நேர்ந்த அதிசயம்! தேனி பரபரப்பு!

தேனியில் பள்ளி மாணவியின் ஷுவுக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை மாணவி காலனியை அணியும்போது பார்த்ததால் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.


தேனி அருகே உள்ள கோடங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவருடைய மகள் அவந்திகா (9), அருகில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். அவந்திகா பள்ளிக்கு செல்வதற்காக காலையில் புறப்பட்டு புத்தகப்பை மற்றும் சீருடை அணிந்து வெளியே வந்து தனது காலனிய அணிய எடுத்துள்ளார்.

அப்போது காலனிக்குள் ஏதோ இருப்பதை உணர்ந்த அவந்திகா உள்ளே பார்த்துள்ளார். அப்போது காலனிக்குள் பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காலணியை கீழே போட்டுள்ளார். உடனே குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் ஓடிவந்து பார்த்தபோது காலணிக்குள் நல்ல பாம்பு குட்டி ஒன்று சுருண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் அதன் அருகில் யாரும் செல்லாதவாறு பார்த்துக் கொண்டனர். இதையடுத்து உடனே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வந்த பிறகு பாம்பு குட்டி லாபகரமாக பிடிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பாம்பு குட்டி கண்ணன் அருகில் உள்ள மலை பகுதிக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை வேளையில் கழட்டிவிட்ட காலணியை திங்கட்கிழமை எடுத்து பார்த்தபோது உள்ளே பாம்பு குட்டி இறந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.எனவே பள்ளி மாணவிகளின் காலணி மற்றும் ஸ்கூல் பேக் ஆகியவற்றை பத்திரமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

மாணவி அவந்திகா தனது காலனியை கவனிக்காமல் போட்டிருந்தால் உள்ளே இருந்த பாம்பு குட்டி அவரை கடித்தால் உயிருக்கே ஆபத்தாக இருக்கும் என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நல்லபடியாக மாணவி முன்கூட்டியே பார்த்ததால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.