100 நாள் செக்ஸ் இல்லாமல் எப்டி இருப்பீங்க? பிக்பாஸ் நடிகையிடம் கேட்கப்பட்ட விபரீத கேள்வி!

ஐதராபாத்: செக்ஸ் இல்லாமல் 100 நாள் வாழ முடியுமா, என்று பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துவோர் கேட்டதாகக் கூறி, நடிகை காயத்ரி குப்தா புகார் தெரிவித்துள்ளார்.


இதுபற்றி அவர் கூறியதாவது:

இரண்டரை மாதங்களுக்கு முன்பாக, பிக் பாஸ் தெலுங்கு மொழி நிகழ்ச்சிக்காக, என்னை ஒப்பந்தம் செய்திருந்தார்கள். இதற்காக, பல்வேறு நடிப்பு வாய்ப்புகளை நிறுத்தி விட்டு காத்திருந்தேன். ஆனால், திடீரென நிகழ்ச்சிக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், 100 நாட்கள் செக்ஸ் மற்றும் குடும்பம் இல்லாமல் உங்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்தி வாழ இயலுமா, என என்னிடம் பிக் பாஸ் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. இது மிக  அதிர்ச்சியாக இருந்தது. செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா என்று என்னை எப்படி அவர்கள் கேட்கலாம்?

நான் அந்த கேள்விக்கு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, என்னுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துவிட்டார்கள். இந்த கேள்வியை ஒப்பந்தம் செய்யும்போதே கேட்டிருந்தால், எனக்கு எந்த பிரச்னையும் வந்திருக்காது. நான் வேறு தொழிலை பார்க்கச் சென்றிருப்பேன். ஆனால், நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் கேட்டதன் மூலமாக, வேண்டுமென்றே என்னை வெளியே அனுப்பிவிட்டனர்.

அத்துடன் என்னால் சரியான முறையில் டிஆர்பி ரேட்டிங் தர முடியாது என்றும், ஸ்டார் மா தொலைக்காட்சி தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. பிக் பாஸ் என்ற பேரில் பலர் உள்ளே சென்று சண்டையிட்டுக் கொண்டால் டிஆர்பி அதிகரிக்கும் என சிலர் நம்புகிறார்கள். அத்துடன், செக்ஸ்க்கு ஒத்துக் கொண்டால் வாய்ப்பு தருவோம் என்றும் மறைமுக அழுத்தம் தந்தார்கள். எனக்கு இப்படி பலவிதங்களில் டார்ச்சர் செய்த அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன்.

இவ்வாறு நடிகை காயத்ரி குப்தா கூறியுள்ளார். 

ஏற்கனவே, பத்திரிகையாளர் ஸ்வேதா ரெட்டி, தன்னிடம் செக்ஸ் உறவுக்கு இணங்கும்படி கேட்டனர் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய நிலையில், காயத்ரியின் புகார் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.