நடமாடும் டாஸ்மாக்கா கேட்குது உனக்கு? தனியரசு செல்லும் இடம் எல்லாம் செருப்படி! போருக்குத் தயாராகும் பெண்கள்!

நடமாடும் டாஸ்மாக் வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கேட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அரசுக்கு ஜால்ரா போடவேண்டும் என்பதற்காக நடமாடும் டாஸ்மாக் கேட்ட தனியரசுக்கு எதிராக மதுவிலக்குப் போராளிகள் களம் இறங்கி கேள்வி எழுப்புகிறார்கள். ஆண் என்கிற திமிரில் ஊறித்திளைத்த ஒருவரை சட்டமன்றத்துக்கு அனுப்பினால் என்ன செய்வார்? நடமாடும் டாஸ்மாக் கேட்பார்.

இவர்களுக்கு கிராமம் தோறும் டாஸ்மாக் வந்து, உழைக்கும் மக்களின் பணத்தை சுரண்டியதையும் பல பெண்களின் தாலி பறிபோனதையும் அறியமாட்டார்கள். தனியரசுக்களை சட்டமன்றத்துக்கு அனுப்பியவர்கள் கூனிக்குறுக வேண்டும்.

முதலில் இந்த திமிர்ப்பேச்சுக்கு தனியரசு வெட்கப்பட வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால், தனியரசு செல்லும் இடம் எல்லாம் போராட்டம் நடத்தப்படும், செருப்படி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய பெண்களை அடித்து விரட்டும் போலீஸ் துறையை கையில் வைத்துள்ள எடப்பாடி இப்போது யார் பக்கம் நிற்பார்?