தல தில்ல பாத்தியா! அம்பயர் முடிவால் கடுப்பாகி மைதானத்தில் தில்லாக இறங்கிய தோனி !

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கடைசி ஓவரில் டோனி அவுட் ஆன பிறகு, ஸ்டோக்ஸ் வீசிய பந்து புள் டாஸ் ஆக இருந்ததால் அம்பயர் நோ பால் என அறிவித்தார்.அனால் லெக் அம்பயர் இதை நோ பால் என அறிவிக்கவில்லை . இதனால் அம்பயர்கள் இருவரும் கலந்து பேசி வந்தனர். இதனால் கோபமடைந்த டோனி களத்தில் இறங்கி அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

இதனால் அந்த ஆனால் பெரிய இலக்கை நிர்ணயிக்கமுடியவில்லை. ராஜஸ்தான் ராயல் அணியில் பெண் ஸ்டோக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்களை அடித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்தது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக தீபக் சஹர், ஜடேஜா, ஷார்துல் தாக்குர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் சென்னை அணி 24 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.பின்னர் தோனியும் அம்படி ராயுடுவும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.சிறப்பாக விளையாடிய ராயுடு 57 ரன்களுக்கு அவுட் ஆனார்.கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டோனி அந்த ஓவரின் 3வது பந்தில் அவுட் ஆனார். இவர் 58 ரன்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த பந்தை சான்ட்நெர் எதிர்கொண்டார். கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை அணியை அவர் வெற்றி பெற வைத்தார். இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.