தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு விழாவை நடத்தியது.
37 பேர் உடல் கருகி பலியான தஞ்சை பெரிய கோவிலின் 1997ம் ஆண்டு கும்பாபிஷேகம்! என்ன நடந்தது தெரியுமா?
அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செங்குட்டுவன் தலைமையில் குடமுழுக்கு விழா நடந்தது. குடமுழுக்கு விழாவின்போது ஏற்பட்ட தீ விபத்தில் யாக சாலையில் 37 பேர் தீயில் கருகியும், அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேரும் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அங்கு வந்தார். தஞ்சை பெரிய கோயிலின் பிரதான வாயிலான கேரளாந்தகன் கோபுர வாயில் வழியாக வராமல், பெரிய கோயில் மதில் சுவரை ஒட்டியுள்ள சிவகங்கைப் பூங்கா வழியாக வந்துபோனார். அதேபோல 2009ஆம் ஆண்டில் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு சதய விழாவின்போது நிகழ்ந்த ஆயிரம் பெண்களின் பரத நாட்டியத்தை காண இதே போன்று சிவகங்கை பூங்கா மதில் சுவரில் போடப்பட்ட துளை வழியாகத்தான் வந்துபோனார்.
பெரிய கோயிலின் பிரதான வாயிலான கேரளாந்தகன் கோபுரம் வழியாக கோயில் வளாகத்திற்குள் வரவில்லை. கோயிலின் பிரதான வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் வழியாக உள்ளே வருபவர்களின் பதவி பறிபோகும் என்ற மூடப்பழக்கத்தை நம்பி இருமுறையும் பிரதான வாயிலை புறக்கணித்தார் கலைஞர்.
நன்றி: நம்பிக்கை ராஜ்