உலக அதிசயம்! வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்!

பெண் ஒருவர், 9 நிமிடங்களில், 6 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தெல்மா சியாகா என்ற பெண்தான் இந்த சாதனையை செய்த அரிய பெண். மற்ற பெண்களைப் போல, கர்ப்பம் தரித்த இவர், தனக்கு ஒரு குழந்தை அதுவும் ஆண் அல்லது பெண் பிறக்கும் என நினைத்திருந்தார். 

ஆனால், மருத்துவமனையில் பிரசவத்திற்காக, அவர் சேர்ந்த பின், அவரது வயிற்றில், 6 குழந்தைகள் இருக்கும் செய்தியை, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில், அவர் அதிர்ந்தே போனார். எனினும், மருத்துவர்கள் உரிய நம்பிக்கை கொடுத்து, பிரசவத்திற்காக, அவரை தயார்செய்தனர். 

இதன்படி, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும், டெக்சாஸ் மகளிர் மருத்துவமனை மருத்துவர்கள் நிதானமாக, உரிய பாதுகாப்புடன், சிகிச்சை வழங்கினர். வெறும் 9 நிமிடங்களில், அவர், 6 குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றெடுத்தார். அனைத்தும் சுகப்பிரசவம்

இதில், 3 இரட்டைக் குழந்தைகள் அடங்கும். 2 ஆண் இரட்டைக் குழந்தைகளும், ஒரு பெண் இரட்டைக் குழந்தையும் அடக்கம். அவை நல்ல உடல்நலத்துடன் உள்ளன. இது தவிர, தெல்மா சியாகாவும் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். 

அவர் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரே நேரத்தில் 6 குழந்தைகளை பெற்ற அதிசயப் பெண்மணி என்று இவர் பிரபலமாகிவிட்டார்.