கோடை காலம் துவங்கும் முன்பே செஞ்சுரியை தாண்டிய வெயில்! திருத்தணியில் தவிக்கும் மக்கள்!

தமிழகத்தில் கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே வெப்பம் தகிக்க ஆரம்பித்துள்ளது.


நாளை மறுநாள் சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி கரூர், திண்டுக்கல்,நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று வீசும்.

உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும், தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்,  கடலோர தமிழகத்தில் 2 டிகிரி செல்சியஸ் உயர கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிட்ட கூடிய அளவில் மழை பதிவாகவில்லை. சென்னையை பொருத்த வரை வானம் தெளிவாக இருக்கும்,

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.  தமிழகத்திலே அதிகபட்சமாக வெப்பநிலை  திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹிட் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே தமிழகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது. அதிலும் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் கொளுத்தியிருப்பது பொதுமக்களை பீதி அடைய வைத்துள்ளது.