39 வயது தான்..!பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர வைக்கும் காரணம்! பேரதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் மருத்துவமனையில் உடல் நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு தெலுங்கு திரையுலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.


பிரபல நகைச்சுவை நடிகரான வேணு மாதவ் (வயது 39) தெலுங்கு திரையுலகில் 1996 ஆம் ஆண்டு முதல் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். 1968 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் சூரியபேட்டை மாவட்டத்தில் பிறந்தவர் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மகேஷ்பாபு, பவன் கல்யாண், ராம் சரண் போன்ற முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். 

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் காரணமாக திரைப்படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் சில மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக கோளாறு, கல்லீரல், நீரிழிவு போன்ற சில பிரச்சினைகளில் இவருக்கு இருந்ததால் நாளுக்கு நாள் உடல் நிலை மோசமாகிக் கொண்டே இருந்தது.

இதற்கிடையே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர். இன்று அறுவை சிகிச்சை நடக்க இருக்கும் நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.