கைகளில் ஆசை மகள் சடலம்! கண்களில் தாரை தாரையாக கண்ணீர்! ஹாஸ்பிடல் வாசலில் தவித்த தந்தை! நெஞ்சை வெடிக்கச் செய்யும் சம்பவம்!

தெலுங்கானா மாநிலத்தில் தனது இறந்த மகளின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டதால் தந்தையே தனது மகளின் உடலை தனது தோளில் வீடு வரை சுமந்துசென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனது 7 வயது மகளை அவரது தந்தை சம்பத்குமார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்நிலையில் குழந்தைக்கு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனது குழந்தையின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச்செல்ல மருத்துவமனையிடம் ஆம்புலன்ஸ் உதவி கேட்டுள்ளார் சம்பத்குமார். இந்நிலையில் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் உடனே அதிர்ச்சி அடைந்த சம்பத்குமார் தனது மகளின் உடலை தனியார் வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்ல தன்னிடம் போதிய அளவு பணம் இல்லாத காரணத்தினால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.  

இந்நிலையில் கண்ணீர் மல்க தனது குழந்தையின் உடலை தனது தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அதைப்பார்த்த மனிதாபிமானமிக்க ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குழந்தையின் உடலை ஆட்டோவில் ஏற்றி அவரது வீடு வரை கொண்டு சென்றது வீட்டை விட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இதனை வீடியோவாக பதிவு செய்த பலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது சம்பத்குமார் ஆம்புலன்ஸ் உதவி கேட்டு வந்த போது மருத்துவமனையில் எந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் இல்லை எனவே சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என நாங்கள் கூறினோம் ஆனால் சம்பத்குமார் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு உடனே வாகனம் அனுப்புமாறு மருத்துவத்துறை ஊழியர்களிடம் சண்டையிட்டதாக கூறியுள்ளனர்.

மற்றும் காத்திருக்காமல் அவரே தனது இறந்த மகளின் உடலை சுமந்து வீட்டிற்கு சென்றுவிட்டார். என தெரிவித்துள்ளனர் இதனால் தங்களுக்கும் அச்சம்பவத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.