10 நாள் அமைதி! 11வது நாளில் ருத்ரதாண்டவம்! 4 பேரையும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கேசிஆர்! இவர் தான் மக்களின் முதல்வர்!

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்ப்டட சம்பவத்தில் முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை, என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த வழக்கில் முதல்வர் மறைமுகமாக தனது பணியை செய்தார் என்ற புது தகவல் கிடைத்துள்ளது.


நவம்பர் 27ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில் சுங்கச்சாவடி அருகே கால்நடை பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார் இன்று காலை அவர்களை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை எனவும் இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தனர்.

மேலும், டெல்லியில் இருந்து திரும்பிய தெலுங்கானா முதலமைச்சர் 3 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் எனவும், ஆனால் பெண் மருத்துவர் மரணத்தை கண்டுகொள்ளவில்லை எனவும் தெலங்கானா எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் முதல்வர் சந்திரசேகர ராவ் தன்னுடைய மகனிடம் கே டி ராமா ராவ் போலீசுடன் இணைந்து பணியாற்ற உத்தரவிட்டு இருந்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது இந்த குற்றம் வெளியே தெரிந்த அன்று அது குறித்து தீவிரமாக விசாரணை நடத்துவோம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டு இருந்தார். அது மட்டுமின்றி இந்த வழக்கை விசாரிக்க 10 தனிப்படை அமைத்தார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்பும் கே டி ராமா ராவ் கவனித்து வந்தார். போலீசுக்கு அவர் இது தொடர்பாக அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

இது தொடர்பாக கே டி ராமா ராவ் நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் பேசினார். மக்கள் எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள். இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்பின்தான் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது.