நட்சத்திர ஓட்டலில் அரசியல் வாரிசிடம் சிக்கி கதறிய பிக்பாஸ் நடிகை..! மெல்ல மெல்ல கசியும் அந்தரங்க தகவல்கள்!

தெலுங்கானா மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏவின் மகன் பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.


தெலுங்கில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் பிரபல தெலுங்கு திரையுலக நடிகை சஞ்சனா. இவர் 2 நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று இரவு அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த முன்னாள் எம்எல்ஏ நந்தீஸ்வர் கவுடு என்பவரின் மகன் ஆஷிஷ் கவுடு தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.

அப்போது அவர்கள் தங்கியிருந்த அறைக்கு பக்கத்தில் நடிகையும் தங்கி இருந்துள்ளார். இதை பார்த்த அவர்கள் சஞ்சனாவை இழுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த அறையில் முன்னாள் எம்எல்ஏ மகன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், பின்னர் அலறியடுத்து அங்கிருந்து தப்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் தப்பிக்க முயற்சித்தபோது மாடியில் இருந்து கீழே தள்ளி கொல்ல முயன்றதாக பரபரப்பு புகார் அளித்துள்ள நடிகை சஞ்சனா இவை அனைத்திற்கும் அந்த ஓட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளே சாட்சி என தெரிவித்துள்ளார் . இந்த புகாரை அடுத்து ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் தலைமறைவாகி உள்ளனர் . இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிசிடீவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.