தெலுங்கானா ஆளுநரான தமிழிசை! சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறி அதிர வைத்த தந்தை குமரி அனந்தன்!

மகள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்த சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறி அதிர வைத்துள்ளார் குமரி ஆனந்தன்.


தமிழகத்தின் முதுபெரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருப்பர் குமரி அனந்தன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார். மேலும் காமராஜர் கக்கன் தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் புதிதாக கட்சி எல்லாம் தொடங்கி நடத்திப் பார்த்தார்.

பிறகு மீண்டும் காங்கிரசில் ஐக்கியமான குமரி அனந்தன் தற்போது காங்கிரஸ் கட்சியின் புகார் விசாரிப்பு குழு எனும் பொறுப்பில் இருக்கிறார். இவரது மகளான தமிழிசை தந்தையின் கொள்கைக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட பாஜகவில் இணைந்தார்.

படிப்படியாக முன்னேறி தற்போது தமிழிசை ஆளுநராக பதவி ஏற்க உள்ளார். இது குறித்து குமரி அனந்தனை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மகளின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவார் என்று பார்த்தால் அவர் கூறிய பதில் பத்திரிகையாளர்களை அதிர வைத்தது.

கடுமையான உழைப்பால் அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது அதை தவிர சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை என்று கூறி முடித்துக் கொண்டார் குமரி அனந்தன். மகள் குறித்து பெருமைப்படும் வகையில் ஏதேனும் கூறுவார் என்றால் இப்படி முடித்துக் கொண்டாரே என்று செய்தியாளர்கள் கூட ஏமாற்றம் அடைந்நதனர்.