இழுத்து மூடப்பட்டன டாஸ்மாக் கடைகள்! முன்கூட்டியே சரக்கு வாங்கி வைத்திருப்பவர்களுக்கும் சிக்கல்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.


நாளை மறுநாள் தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சனை இல்லாமல் நடைபெற தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி இன்று முதல் 18ந் தேதி இரவு வரை மதுக்கடைகள் மூடப்பட்ள்ளன. இந்த மூன்று நாட்கள் பிளாக்கில் கூட சரக்குகள் கிடைக்காத வகையில் அதிகாரிகள் கெடுபிடி காட்டுகின்றனர்.

இதனால் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கிப் பதுக்குவதற்காக  பல்வேறு டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் முண்டியடித்தனர்.  ஒரு சில குடிமகன்கள் ஏறி விழுந்து, கட்டிப்புரண்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு மதுப்பாட்டில்களை வாங்கிசென்றனர்

கூடுதலதாக மதுபாட்டில்களை வைத்திருந்தால் பறிமுதல் செய்யயும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே குடிமகன்கள் உஷாராக இருக்கவும்.