உமா மகேஸ்வரி கொலை வழக்கு! க்ளூவே இல்லாமல் கொலையாளியை தூக்கிய தமிழ்நாட்டு போலீஸ் கெத்து! அசர வைத்த விசாரணை!

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலையில் குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


ஒரு க்ளூவும் இல்லையென்று தடுமாறிய போலீஸ் எப்படி முன்னேறியது என்பதைப் படித்துப் பாருங்கள். உமா மகேஸ்வரி கழுத்தில் நகையை காணோம் என்றதும் இது நகைக்கான கொலை என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 10 பவுன் நகை, 10 ஆயிரம் ரூபாய் பணத்துக்காக போய் 3 பேர் கொலை செய்யப்படுவார்களா என்பது அடுத்த குழப்பம். கொலையாளிகள் உமா மகேஸ்வரிக்கு தெரிந்தவர்கள் என்று கருதப்பட்டது. ஏனெனில் ஹாலில் உட்கார்ந்து தண்ணி குடித்திருக்கிறார்கள்.

அதனால்தான் கடைசிவரை தங்கி சென்று தடயங்களையும் அழித்து விட்டு சென்றிருக்கிறார்கள். திடீரென புகுந்த கொள்ளையன் இப்படி சாவகாசமாக கொலை செய்திருக்க முடியாது. உமா மகேஸ்வரி கழுத்தில் 6 இன்ச் அளவுக்கு கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டு இருந்தது. கணவரின் உடம்பெல்லாம் எண்ணவே முடியாத அளவுக்கு கத்தி குத்துகள். அவ்வளவு ஆவேசமாக குத்தி துளைத்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூமில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர் என்ற போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் போலீசாருக்கு நான்காவது குழப்பம்.

எந்த கொலையாளியுமே ஒரு கொலையை செய்தால், அவனையும் அறியாமல் ஒரு தடயத்தை விட்டு போவது இயல்பு. அப்படி ஒரு க்ளூவும் அந்த வீட்டில் இல்லாததும், வீட்டில் ஆகட்டும், அந்த தெருவில் ஆகட்டும் சிசிடிவி கேமரா இல்லாதது போலீசாருக்கு மைனஸ்.

30 கோடிக்கு சொத்து இருந்தாலும், 25 கோடி ரூபாய் சொத்து கொஞ்சம் வில்லங்கம் கொண்டது என்பதால், சொத்துக்கான கொலையாக இது பார்க்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தர ஏமாற்றம் அடைந்ததால், அரசியல் ரீதியான கொலையாக இது பார்க்கப்பட்டது. கணவரின் வீட்டு பக்கம் நிறைய பிரச்சனை சொத்து விவகாரத்தில் இருந்து வந்ததால், இது குடும்ப தகராறாகவும் பார்க்கப்பட்டது.

டெக்னிக்காக கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்தால் வடமாநில ஆட்கள்நகை, பணத்துக்காக செய்திருக்கலாம் என்றும் பார்க்கப்பட்டது. உமா மகேஸ்வரியை சுற்றி என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் குழம்பியது. இப்படி ஒரு துப்பும் இல்லாமல், ஒரு சின்ன க்ளூவும் இல்லாமல் தனது விசாரணையை பல்வேறு சிக்கல்களுக்கிடையே போலீசார் துவக்கியது உண்மையிலேயே மிகப் பெரிய சவால்தான். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உள்ள சிசிடிவியை கேமராவை ஆராய்ந்ததால்தான் இந்த விசாரணை தீவிரமானது.

அந்த ஓட்டல் முன்பு நின்றிருந்த ஸ்கார்பியோ கார்தான் முதல் க்ளூ. அடுத்த ஒரு செல்போன் நம்பர் அந்த டவரில் அதிக நேரம் பேசியதாக காணப்பட்டது.இதுதான் இரண்டாவது க்ளூ. தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிடக்கூட இல்லாமல் 3 பேருமே அவசரஅவசரமாக ஓட்டலை விட்டு கிளம்பியது 3-வது க்ளூ. கொலை நடந்த நேரமும், இவர்கள் ஓட்டலை விட்டு கிளம்பி சென்ற நேரமும் ஒன்றேதான் என்பது 4-வது க்ளூ. ஸ்கார்பியோ கார் ஓனரும், சிக்னல் காட்டிக் கொடுத்த செல்போன் ஓனரும் ஒருவர்தான் என்பது 5-வது க்ளூ.

இப்படிதான் கொலையாளி சிக்கி உள்ளான். எந்த தடயமும் கிடைக்காத பட்சத்தில், மிகக்குறுகிய காலத்தில் கொலையாளியை போலீசார் ரவுண்டு கட்டி பிடித்து விட்டார்கள். இந்த விஷயத்தில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கர், துனை ஆணையர் சரவணன் நுண்ணறிவு உதவி ஆணையர் என கேஸில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். சபாஷ் போலீஸ்.