செப்டம்பர் 11..! புதன்கிழமை அரசு விடுமுறை! ஐ ஜாலி! ஏன் தெரியுமா?

இஸ்லாமியர்களின் முக்கிய தினமான மொஹரம் பண்டிகை செப்டம்பர் 10ம் தேதிக்கு பதில் 11ம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் அரசு பொது விடுமுறையும் 11ம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பொதுவாக இஸ்லாமியர்களின் மாதங்களில் ஒன்றான மொஹரம் மாதத்தின் 10வது நாள் மொஹரம் தினமாக கடைப்பிடிப்பது வழக்கம். பிறை தெரிவதை வைத்து மொஹரம் நாள் நிர்ணயம் செய்யப்படுகிறது. பிறையானது 5 நாள்களுக்கு முன்பே பார்க்கப்பட்டு மொஹரம் தினம் தீர்மானிக்கப்படும்.

ஆனால் கடந்த வியாழன் அன்று மொஹரம் தினத்துக்குரிய பிறை ஏதும் தென்படவில்லை. பிறை தென்படாத காலங்களில், மாதத்தின் 10-ஆவது நாள் மொஹரம் தினமாகக் கடைப்பிடிக்கப்படும். அந்த வகையில், வரும் 11-ஆம் தேதியே மொஹரம் தினம் வருகிறது.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நடப்பு ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலில் மொஹரம் செப்டம்பர் 10-ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே, பிறை தெரிவதை வைத்துக் கணக்கிட்டதில் மொஹரம் தினம் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது செப்டம்பர் 11ம் தேதியன்று அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது.  

இதனால் தொடர் விடுமுறை வரும் என கருதியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை என்ற பட்சத்தில் திங்கட்கிழமை ஒரு நாள் லீவு எடுத்து விட்டால் 10ம் தேதி மொஹரம் விடுமுறையும் அனுபவித்து விட்டு வரலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம்.