ஆ.ராசாவை திகார் அழைக்கிறது… தமிழக அமைச்சர்கள் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் அப்பீல் நிலுவகையில் இருக்கும் நேரத்திலேயே அவர் மரணம் அடைந்துவிட்டதால், அவர் குற்றவாளி இல்லை என்று வழக்கறிஞர் ஜோதி தெளிவாக எடுத்துக்கூறிய பிறகும், தேய்ந்த ரிகார்டு போலவே மீண்டும் மீண்டும் பொய் பேசி வருகிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா.


இந்த நிலையில் ஆ.ராசாவுக்கு சூடு கொடுக்கும் வகையில் தமிழக அமைச்சர்கள் தங்கள் கோபத்தைக் காட்டியுள்ளனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, ஆ.ராசா குறித்து கடுமை காட்டினார்.

’ஜீ… பூம் பா ஜூ மந்திரகாளி என எனக்கூறுவது போல முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின், திகார் வா வா என்பதால் ஆ.ராசா தற்போது பேசி வருகிறார்’ என்று செல்லூர் ராஜூ தெறிக்கவிட்டார்.

இதையடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ‘’ 2ஜி வழக்கு நிலுவையில் உள்ள போது பொது வெளியில் அதை பற்றி பேசக்கூடாது என்றும், பொது வெளியில் பேசும் போது ஆ.ராசாவுக்கு கவனம் தேவை’’ என அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொண்டோம் என்று விழிக்கிறாராம் ஆ.ராசா