மக்கள் சுய ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி காணப்படுகிறது தமிழகத்தின் தலைநகரம்!

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி அங்காடி என்று அழைக்கப்படும் கோயம்பேடு சந்தை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.


ஒட்டுமொத்த வணிக நிறுவனங்களும் விடுமுறை அளித்து உள்ளதால் அனைத்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளதால். கோயம்பேடு சந்தைக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப் படுகிறது.

இந்த மக்கள் சுய ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக சென்னையின் பரபரப்பான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்கள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகள், பேருந்து,ரயில் மற்றும் விமான நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி மக்கள் கூடும் அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்த நிலையில் தமிழக காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, தங்கள் பகுதியில் வெளிநாடுகளிலிருந்து எவரேனும் வந்திருந்தால் எங்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துங்கள் என்றும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுய ஊரடங்கு நடவடிக்கைகளால் தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.