டாக்டர்கள் புது வடிவில் போராட முடிவு! எடப்பாடி கொஞ்சம் கவனிங்க!

நியாயமான நான்கு கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் நான்கு நாட்களாக போராடி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை கடந்த இரண்டு வருடங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்களில் புதுமையாகப் போராட முடிவுக்கு வந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். ஆம், கையெழுத்து போடாமல் அன்றைய தினம் கூடுதல் நேரம் உழைப்பதற்கு தயாராகி வருகிறார்கள். இந்த முழு நேர போராட்டத்தை மக்கள் வரவேற்று உள்ளனர். 

எது எதற்கோ நேரம் எடுத்து பேசிவரும் அரசு, உயிர் காக்கும் மருத்துவர் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது சரியல்ல. எடப்பாடியார் இனியாவது மருத்துவர்களை அழைத்துப் பேசி உடனடியாக தேர்வைகளை தீர்த்துவைக்க வேண்டும் என்று மக்களும் வேண்டுகோள் வைக்கிறார்கள்.